நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

X
தூத்துக்குடியில் 44வது வட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக முதலமைச்சர் உத்தரவு படி கோடைகாலத்தை முன்னிட்டு பிரையண்ட்நகர் 44வது வட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பல்வேறு பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ரூபராஜா, மாநகர இலக்கிய அணி துணைச் செயலாளர் பிக்கப் தனபாலன், பகுதி அவைத்தலைவர் பால்சாமி, பகுதி பிரதிநிதிகள் சுகன்யா செந்தில்குமார் செல்வம், கவுன்சிலர்கள் ராஜேந்திரன் சரவணகுமார், வட்டச் செயலாளர்கள் சுப்பையா முக்கையா நவநீதன் சுரேஷ்குமார் சரவணன் சிங்கராஜ் மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், வட்ட அமைத்தலைவர் ஆறுமுக கனி, வட்ட பிரதிநிதிகள் வெற்றி ராஜன் சுப்பம்மாள் முருகன் பாஸ்கர், கிறிஸ்டோபர் கணபதி சுந்தர் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் உமா மகேஷ் வட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், வட்ட துணைச் செயலாளர் சத்தியபாலன், மற்றும் ராஜா, வட்டப் பிரதிநிதி சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story

