ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை!

X
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், "வரும் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். அதற்காக நினைவஞ்சலி கூட்டம் நடத்த நமது கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள பொதுக் கூட்டத்திடலில் மே-21 அல்லது மே-22 ஆகிய இரு தினங்களில் 3 கால நேரங்களில் ஏதாவது ஒரு நாள் - நேரத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விவரங்களை கேட்டறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story

