மீன்வளக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி

மீன்வளக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி
X
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் "ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பானது 22.04.2025 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 06 பயிற்சியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இப்பயிற்சி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் வகைகள், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பிற்கு ஏற்ற மீன்கள், ஒருங்கிணைந்த மீன் பண்ணை அமைப்பதற்கான இடத்தேர்வு முறைகள், நீர்தரக் கட்டுப்பாடு, உணவு தயாரித்தல் மற்றும் உணவிடுதல் முறைகள், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு வழங்கப்பட்டது. தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் தலைமையுரையில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் புதிதாக தொழில் துவங்கி நன்முறையில் லாபம் பெற்று பயனடைய வேண்டுமென்று பயிற்சியாளர்களை ஊக்குவித்தும் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இப்பயிற்சி உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கோ. அருள் ஒளி, ஒருங்கிணைக்கப்பட்டு, உதவிப் பேராசிரியர்கள் பூ. மணிகண்டன், வெ. கோமதி மற்றும் ம. கீதா, ஆகியோரால் நடத்தப்பட்டது.
Next Story