ராமநாதபுரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி குண்டு மிளகாய் மற்றும் சம்பா மிளகாய் நடவு செய்து இருந்தனர் இந்நிலையில் நடவு செய்த மிளகாய் பயிர்கள் நன்கு முளைத்து மிளகாய் பழங்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கோடை மழை பருவம் தவறிய. மழைப்பொழிவின் தாக்கத்தின் காரணமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளையிலான மிளகாய் பயிர்கள் அனைத்தும் சேதமாகி பயிர்கள் அனைத்தும் கருகின இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் இழப்பீடு நிவாரண வழங்க கோரி கமுதி தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

