நாமக்கல்லில் உலக பூமி தின விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.

X
NAMAKKAL KING 24X7 B |23 April 2025 6:12 PM ISTநாமக்கல்லில் நடந்த உலக பூமி தின விழிப்புணர்வு பேரணியில், திரளான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பூமி மாசடைவதை தடுக்கும் வகையில், அனைத்து நாடுகளிலும் உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை உலக மக்கள் உணர வேண்டும் என, கேலார்ட் நெல்சன் என்ற அமெரிக்கர் கருதினார். அதையடுத்து, ஊர்வலம், பொதுக்கூட்டம், போன்றவற்றை மாணவர்களைக் கொண்டு நடத்தி சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1970, ஏப். 22ம் தேதி, பூமியைப் பாதுகாக்க, 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, உலக புமி தினத்தை சிறப்பித்து நினைவு கூறும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமை படை சார்பில், உலக பூமி தின விழிப்புணர்பு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாச ராகவன் தலைமை வகித்தார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேரணியை தொடக்கி வைத்தார். பள்ளியில் துவங்கிய பேரணி, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு வழியாகச் சென்று ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் முடிந்தது. பூமியின் பாதுகாப்பு குறித்தும் பற்றியும் மரங்கள் நட்டு வளர்ப்பது குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்க பூமி மாசடைவதை தடுக்க வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காட்டை பார்வையிட்டனர். மாணவர்கள் ஆசிரியர்கள்பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Next Story
