உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர்.குமரவேல் வாழ்த்துச் செய்தி!

X
Namakkal King 24x7 |23 April 2025 6:18 PM ISTவரலாற்றை அறிந்து கொள்வதற்கும், சமூக வாழ்வியல் குறித்து கற்றுக் கொள்வதற்கும் சிறந்த புத்தகங்களை எப்போதும் நமக்கு பெருந்துணையாக இருக்கின்றன.அதன் அடிப்படையில் வாசிப்பிற்காக புதிய வாசல் திறக்கட்டும், வாசிப்பை இயக்கமாக்குவோம்.
உலக புத்தக தின (ஏப்ரல்- 23) கொண்டாடப்படுவதையொட்டி எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள், வாசகா்கள் அனைவருக்கும் தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர் த.குமரவேல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.... மனித சமுதாயத்தின் அறிவு வளா்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும் மொழியையும், கல்வியையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் தன்னிகரற்ற ஊடகமாக புத்தகங்கள் அமைந்துள்ளன.புத்தக வாசிப்பு நமக்குள்ளாக ஒரு புதிய உலகை திறப்பதோடு, நிதானமாகவும் உண்மையை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளவும் வழி வகுக்கிறது.புதிய உலகின் கதவுகளை திறக்கும் அறிவுச்சாவிகளே புத்தகங்கள் என்பதை உணா்ந்து வாசிப்பை பரவலாக்குவோம். புத்தகங்களை எட்டுத்திக்கும் கொண்டு சோ்ப்போம். புத்தகங்கள் குறித்து எனக்கு தெரிந்த ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் லண்டன் சென்றிருந்த போது அவரது லண்டன் தோழர்கள் லண்டனில் எங்கு தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது...நூலகத்திற்கு அருகில் எந்த விடுதிகள் இருந்தாலும் அங்கு தங்கி கொள்கிறேன் என்று உடனே பதில் அளித்தார். இதிலிருந்து அவரது வாசிப்பின் உணர்வு எவ்வளவு என்று தெரிய வரும்.அதுமட்டுமல்ல* ஒரு நூலகம் திறக்கப்படும் ஊரில்.... ஒரு சிறைச்சாலை மூடப்படும்....!என்று சொன்னார் விவேகானந்தர்இப்படிப்பட்ட உலக வரலாற்று சிறப்பு வாய்ந்த *ஏப்ரல் 23- ஆம் தேதியான இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், சமூக வாழ்வியல் குறித்து கற்றுக் கொள்வதற்கும் சிறந்த புத்தகங்களை எப்போதும் நமக்கு பெருந்துணையாக இருக்கின்றன. அதன் அடிப்படையில் வாசிப்பிற்காக புதிய வாசல் திறக்கட்டும், வாசிப்பை இயக்கமாக்குவோம், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம் காண புத்தகங்கள் எனும் அறிவாயத்தை நமது கரங்களில் ஏந்துவோம்உலக புத்தக தின நல்வாழ்த்துக்களை தமிழ்ப்புலிகள் கட்சி-யின் நாமக்கல் தொகுதி மாவட்ட தலைமை-யின் சார்பில் எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள், வாசகா்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள் என்று மாவட்ட செயலாளர் டாக்டர்.குமரவேல் தெரிவித்துள்ளார்.
Next Story
