மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் "பூமிதினம்" விழிப்புணர்வுப் போட்டிகள்...

X
Rasipuram King 24x7 |23 April 2025 7:07 PM ISTமல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் "பூமிதினம்" விழிப்புணர்வுப் போட்டிகள்...
இந்திய அஞ்சல் துறை சார்பாக " பூமி தினத்தை" முன்னிட்டு மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டி நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு பரிசுகளும் சான்றிதழும் வழங்கினார். நிர்வாக அலுவலர் வினோத்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராபின் கங்கவர்த்தனன், இந்திய அஞ்சல் துறை, உடனிருந்தார்.
Next Story
