ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேனி மாவட்ட பாஜகவினர் தீபமேற்றி அஞ்சலி
பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் எனக் கூறி பாகிஸ்தானின் தேசியக்கொடி மற்றும் அவர்களின் ராணுவ தளபதி புகைப்படத்தை தீயிட்டு எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைய ஏற்படுத்தியது இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேனி மாவட்ட பாஜக சார்பில் தேனி நேர சிலை பகுதியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் இந்நிலையில் இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என கூறி பாகிஸ்தானின் தேசிய கொடி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி புகைப்படத்தினை தீயிட்டு எரித்து பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது பாஜகவின் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்ல கூறினர் இதனால் தேனி நேரு சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story




