தண்ணீர் தேடி வந்த மான் நாய்கள் கடித்து பரிதாபமாக உயிரிழப்பு
திருத்தணியில் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வந்த பெண் மான் நாய்கள் கடித்து பரிதாபமாக உயிரிழந்தது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பி.டி.புதூர் அருந்ததியர் காலனி அருகில் தெரு நாய்கள் கடித்து பெண் புள்ளிமான் வயது ஒன்றரை இருக்கும் இந்த புள்ளிமான் கொடூரமான முறையில் நாய்கள் கடித்து இறந்துள்ளது பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திருத்தணி வனத்துறை அதிகாரிகள் பெண் புள்ளி மான் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற பிறகு பிரேத பரிசோதனை முடிந்து வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் இறந்து போன பெண் புள்ளிமான் வயது ஒன்றரை இருக்கும் மேலும் இந்த புள்ளிமான் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி குடிதண்ணீருக்காக வந்தது ஆனால் தெரு நாய்கள் கடித்து தற்போது உயிரிழந்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இறந்து போன புள்ளிமான் உடல் அடர்ந்த வனப்பகுதியில் புதைக்கப்படும் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story




