சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது

சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது
X
சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஏ.ஆர். ரகுராமன் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாச்சியர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் மற்றும் 2024-2025ம் வருட திட்ட நிதி அறிக்கை வெளியிடபட்டது. மேலும் நோயாளிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ரகுராமன் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து தன்னிடம் புகார் வருவதாக தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் இது போன்ற செயல்களில் தொடர்ந்து செயல்படும் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களை வேலையை விட்டு தூக்கி விடுவேன் என கண்டிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story