ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதியும் 100 நாள் வேலை வழங்கிடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது : திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த ஊராட்சியில் சுமார் 1800 குடும்பங்கள் 7500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நகர்புறமாக மாறிவரும் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்னும் நூறு நாள் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன.இதனால் அப்பகுதிவாசிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்ப்பட்டனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதியும் 100 நாள் வேலை வழங்கிடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் வட்டக்குழு உறுப்பினர் பூங்கோதை தலைமையில் நடைபெற்றது.நிர்வாகிகள் சுலோச்சனா, தேவி, கஸ்தூரி, குள்ளம்மாள் செல்வி, விஜயா,கல்யாணி, சாந்தி, மரகதம், ரத்தினம், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் கோபால் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் 100 நாள் அட்டை உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 100 நாள் வேலையை வழங்க வேண்டும், 2024-2025-ல் 100 நாள் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 6 மாத ஊதியத்தை வழங்க வேண்டும்,காந்திநகர் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீர் செய்து, கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போட வேண்டும்,விநாயகர்கோவில் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, கருணாநிதி தெரு, திருவள்ளுவர் தெரு. ராஜீவ்காந்தி தெரு ஆகிய தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்,காந்திதெரு, ஜீவாதெரு, அம்பேத்கர்தெரு, அமுதாநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும்,காந்திநகரில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியும், பூங்காவையும் அமைக்க வேண்டும், மேல்நல்லாத்தூரில் காரிய கட்டிடம் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது பொதுமக்கள் அதிகாரி வாகனத்தின் மீது கொடிகளை போட்டு முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.அப்பொழுது அதற்கான கோரிக்கை மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.அவர், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதில் நிர்வாகிகள் கண்ணன், ராஜேந்திரன்,தமிழ்அரசு,கலையரசன்,கீதா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் சண்முகம் நன்றி கூறினார்.
Next Story




