தந்தையின் கண் முன்னே மகன் சாலை விபத்தில் பலி

X
திருவள்ளூர் அருகே தந்தையின் கண் முன்னே மகன் சாலை விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பழனி இவர் வாத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் பூண்டி பகுதியில் வயல்வெளியில் வாத்து மேய்ச்சலுக்கு விட்டு விட்டு தனது மகன் கார்த்திக் (17) உடன் ஊத்துக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் மாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிர் திசையில் மதுபோதையில் இயக்கி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியதில் சிறுவன் கார்த்திக் சம்பவ இடத்திலே பலியானர்.இது குறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திய பூண்டி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பூபாலன், குமார் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் கண் முன்னே மகன் சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

