பராமரிப்பின்றி உள்ள மயானம் மாற்று இடம் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை

மயானம் பருவமழையில் பாதிக்கப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதால் மாற்று இடம் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை
திருவள்ளூர்- திருவள்ளுர் அடுத்த சத்தரை பகுதியில் மயானம் பருவமழையில் பாதிக்கப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதால் மாற்று இடம் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை மேட்டு காலனி பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு அமைக்கப்பட்ட சுடுகாடு மழைக்காலங்களில் முற்றிலும் சேதம் அடைந்து குட்டையாக மாறியது முறையாக பராமரிக்காமல் சடலங்களை புதைக்க எரிக்க முடியாத சூழல் நிலவுகிறது இந்த நிலையில் கிராம மக்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களை புதைக்க எரிக்க முடியாமல் அவதி உற்று வருகின்றனர் எனவே தங்களது கிராமத்திற்கு மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இத்தகைய நிலையை போக்க மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story