டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்த பெண் விவசாயி : போலீசாருடன் வாக்குவாதம்

ஆந்திர மாநில பகுதிகளில் இருந்தும் சட்டவிரோதமாக சவுடு மண் கடத்தி வரும் டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்த பெண் விவசாயி காவல்துறையினர் சமரசத்தை ஏற்க மறுத்து லாரிகளை விட மாட்டோம் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கரடிபுத்தூர் தாமரைப்பாக்கம் ஆந்திர எல்லையில் இருந்தும் அனுமதி பெறாத ஆந்திர மாநில பகுதிகளில் இருந்தும் சட்டவிரோதமாக சவுடு மண் கடத்தி வரும் டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்த பெண் விவசாயி காவல்துறையினர் சமரசத்தை ஏற்க மறுத்து லாரிகளை விட மாட்டோம் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், கிருஷ்ணா கால்வாய் மீது விவசாய நிலங்கள், வாழை தோப்பு உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து அரசு புறம்போக்கு மற்றும் பட்டா இடங்களில் இருந்து சட்டவிரோதமாக சவுடு மண்ணை டிப்பர் லாரிகளில் கொண்டு வருவதால் கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைவதுடன் விவசாயமும் பாதிக்கப்படுவதாக பலமுறை அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலத்தின் உரிமையாளர்கள் பெண்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சென்னைக்கு குடிநீர் செல்லும் கால்வாயில் இதுபோன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் மணல் உள்ளூர் காவல்துறையினர் உதவியோடு சாலை பணிகளுக்கு என்றும் தனியார் செங்கல் சேம்பர்களுக்கும் விற்கப்பட்டு வருவதால் தாங்கள் இந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் கிருஷ்ணா கால்வாய் கரையில் இப்படி கனரக வாகனங்களில் டிப்பர் லாரிகளில் மண் கொள்ளை நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க முன்வர வேண்டும் என்றும் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடுதல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து அங்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர் போராட்டத்தில் ஏற்பட்ட பெண்ணிடம் சமரசம் மேற்கொண்டனர் அதற்கு அவர் உடன்படாததால் கைது செய்து விடுவோம் என்று கூறியதால் அப்பெண் விவசாயி கண்ணீர் மல்க வந்து வாழை தோப்பை பாருங்கள் கடன் வாங்கி பயிர் செய்கிறோம் என்று கதறினார் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார் இரவு பகலாக கிருஷ்ணா கால்வாய் மீது சவுடு சாலைப் பணிகளுக்கு என்று கூறிவிட்டு தனி நபர்களுக்கு விற்பனை செய்யவும் செங்கல் சேம்பர்களுக்கும் அதிகளவு ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது இதை மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் ஆய்வு செய்யாததால் கனிமவள கொள்ளை தொடர்ந்து இரு மாநில எல்லைகளில் சட்டவிரோதமாக நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story