மாநகராட்சி புதிய ஆணையராக செந்தில்முருகன் பதவியேற்பு

X
சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த எம்.செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சியின் நான்காவது ஆணையராக இவர் பொறுப்பேற்கிறார். மாநகராட்சியில் நிலவும் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய பல பொறுப்புகள் புதிய ஆணையர் முன் சவலாக உள்ளன.
Next Story

