காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி

மன்னார்குடி தேரடியில் பாஜகவினர் காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி
பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு பாஜக சார்பில் மன்னார்குடியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேடியில் பாஜக சார்பில் அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பாஜக மாவட்ட தலைவர் VK.செல்வம்,வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன், இளைஞரணி மாவட்ட தலைவர் அறிவுராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய தலைவர் KN.செல்வம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஜமாலுதீன்,நகர பொறுப்பாளர் வினோத், முன்னாள் நகர தலைவர் ரகுராம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வீரமணி மற்றும் பலர் பங்கேற்று உயிரிழந்த 28 சுற்றுலாப் பயணிகளின் நினைவாக 28 அகல் விளக்குகளை ஏற்றி கண்ணீர் கண்ணீர் அஞ்சலி உடன் வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story