நீர்,மோர், பழங்களை வழங்கிய திமுகவினர்
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நேர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ( ஏப். 23) நடைபெற்றதில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர், ரோஸ் மில்க்,இளநீர், தண்ணீர் பழங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் தென்ழஞ்சி சுரேஷ், நிர்வாகிகள் டிப்போ ரவி, நீதி மன்னன், கவிஞர் ஜீவா, செவன் ஸ்டார் செல்வி, ஆண்டி, இயேசு,கூடல் ராஜேஷ், முத்துமாரி,பூட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story





