புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த சேலம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

X
மயிலம் அருகே பெரும்பாக்கம் மதுவிலக்கு சோதனை சாவடியில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த பஸ்சில் இருந்து இறங்கி சென்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.வாலிபரின் பையில் 14 புதுச்சேரி மதுபாட்டிகள் இருந்தன. பிடிப்பட்ட வாலிபர் சேலம் மாவட்டம், கண்ணவாய்ப்புத்துார் மோமூர் கிராமத்தை சேர்ந்த சக்தி, 37; என தெரியவந்தது. மதுபாட்டில் கடத்திய சக்தியை போலீசார் கைது செய்தனர்.
Next Story

