கிணற்றில் தவறி விழுந்த நர்ஸ் பலி

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திம்மாநத்தம் சுளியோச்சன்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாயி என்பவரின் மகள் சோபனா( 21) என்பவர் உசிலம்பட்டியில் நர்சாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் . இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்( ஏப் .22) மாலை 5.30 மணியளவில் சுளியோச்சன்பட்டி சின்னச்சாமி தோட்டத்திலுள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

