தையல் பயிற்சி வகுப்புக்கு சென்ற பெண் மாயம்.

தையல் பயிற்சி வகுப்புக்கு சென்ற பெண் மாயம்.
X
மதுரை வாடிப்பட்டி அருகே தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சோனை என்பவரின் மகள் முத்துச்செல்வி( 21) என்பவர் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி காலை 8 மணிக்கு தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் இவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை சோனை அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று (ஏப் .23) புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story