கேரளா மடாதிபதி சாமிதோப்பு வருகை

X
கேரள மாநிலம் காயங்குளம் பத்துரு குல ஆசிரமம் மடாதிபதி சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வருகை தந்து குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் மலப்புறம் சந்திப் எர்ணாகுளம் பாபுலால், மணி, அருண்குமார், கோபு மற்றும் பக்தர்கள் வருகை தந்தனர். அன்புவனம் வருகை தந்த மடாதிபதியை அன்புவனம் நிர்வாகி டாக்டர் ஆர். தர்மரஜினி வரவேற்றார். தொடர்ந்து மடாதிபதி அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் வரலாற்று கூடம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
Next Story

