வாலாஜா: பட்டு சாயக்கழிவுநீர் வெளியேற்றம்-ஆணையாளர் எச்சரிக்கை

X
வாலாஜா நகராட்சி ஆணையாளர் இளையராணி தலைமையில், நகராட்சி ஊழியர்கள் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் எந்தவித அனுமதியு மின்றி பட்டு நூல்களில் சாயம் ஏற்றி, அதன் கழிவுநீரை சுத்தப் படுத்தாமல் நகராட்சிக்கு சொந்தமான மழைநீர் கால்வாயில் விடப்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த கட்டிட வளாகத்தின் உள்ளே சென்று ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து அதன் உரிமையாளரை வரவைத்து இதுபோன்று சாயக்கழிவு களை எந்தவித சுத்திகரிப்பும் செய்யாமல், அனுமதியில்லாமல் தொழில் செய்து அதனுடைய கழிவு நீரை நேரடியாக மழை நீர் வடிகாலில் விடுவது குற்றம் என்று எச்சரித்தனர். மேலும் நகரில் இதுபோன்று கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தனர்.
Next Story

