கோவை: பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்- புஸ்சி ஆனந்த் ஆய்வு

X
கோவை, சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் கூட்ட அரங்கம் பணிகளை நேற்று பூஜை செய்து தொடங்கி வைத்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் இந்தக் கருத்தராங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் பேசும்போது, தமிழக வெற்றி கழகத்தின் மண்டல வாரியாக நடக்கக் கூடிய, வாக்குச்சாவடி முகவர்களின், கருத்தரங்கம் வருகிற 26 மற்றும் 27 ஆம் தேதி கோவை மண்டலத்தில் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள், 27 ஆம் தேதி கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கு உண்டான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கக் கூடிய நிகழ்ச்சி, ஏழு முப்பதுக்கு நிறைவடையும். ஒரு, ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரிவித்தார்.
Next Story

