முன்னோடி மனுக்களை பெறும் முகாம்.

X
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் நேரில் வந்து பெற்றுக் கொண்டு அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் 30ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் இன்று (ஏப்.24) நடைபெற்று வருகிறது. இது குறித்து வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் "திருவேடகத்தில் ஏப்.30ம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னோடி மனுக்கள் இன்று (ஏப்.24) சோழவந்தான் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பெறப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Next Story

