மேலே ஏற்றப்பட்ட தேசிய கொடி.

மதுரை விமான நிலையத்தில் மீண்டும் தேசிய கொடி மேலே ஏற்றப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தையான போப் பிரான்சிஸ்(88) அந்த 21ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் மறைவையொட்டி மத்திய அரசு 3 நாள் துக்க தினமாக அறிவித்து நாடு முழுவதும் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க உத்திரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள 100 அடி கம்பத்தில் இருந்து கடந்த 21ம் தேதி மாலை தேசிய கொடி இறக்கப்பட்டு அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இந்த நிலையில் போப்பாண்டவர் மறைவையொட்டி துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் தேசியக்கொடி அறைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்திலும் போப்பாண்டவர் மறைவிற்கு மூன்று நாள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதனை ஒட்டி தற்போது மீண்டும் தேசியக்கொடி முழுவதுமாக ஏற்றப்பட்டுள்ளது.
Next Story