கோடை விடுமுறையை முன்னிட்டு

கோடை விடுமுறையை முன்னிட்டு
X
மும்பை-கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு மும்பையில் இருந்து திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.15 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்ைல, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-மும்பை சி.எஸ்.எம்.டி. வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01006) அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி முதல் ஜூன் மாதம் 26-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இரவு 1 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Next Story