சேலத்தில் ஓடும் பஸ்சில் துணிகரம்: பெண் பயணியிடம் செல்போன் திருட்டுதொழிலாளி கைது

X
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் நேற்று முன்தினம் மாலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார். டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவரது பையில் வைத்திருந்த செல்போனை ஒருவர் திருடினார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

