பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு
X
அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் சேலம் கோட்டை பகுதியில் நேற்று மாலை பா.ஜனதா கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், த.மா.கா. மாவட்ட தலைவர் உலகநம்பி, பா.ம.க. மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மவுன அஞ்சலி செலுத்தினர். அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Next Story