பொதுமக்களுக்கு இலவச நீர் மோர்

X
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைத்தலைவரும், அஞ்சுகிராம பேரூர் திமுக துணைச் செயலாளருமான சமூக சேவகர் ஆட்டோ சொர்ணப்பன் தலைமை தாங்கி, வட்டாரத் தலைவர் சுடலை மணி வட்டார செயலாளர் அஞ்சலி லிங்கம் ராஜேந்திரன் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.
Next Story

