புகழூர்-காகித ஆலைக்குள் நின்றிருந்த டிரைவர் மீது மோதிய ஹிட்டாச்சி வாகனம்.
புகழூர்-காகித ஆலைக்குள் நின்றிருந்த டிரைவர் மீது மோதிய ஹிட்டாச்சி வாகனம். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மாட்டு வேலம்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் வயது 52. லாரி டிரைவர். இவர் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில், கரூர் மாவட்டம், புகலூரில் செயல்படும் டிஎன்பிஎல் காகித ஆலையின் உள்பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது டிஎன்பிஎல் ஆலைக்குள் வந்த பதிவெண் இல்லாத ஹிட்டாச்சி வாகனம் நின்று கொண்டிருந்த சண்முகத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் அறிந்த சண்முகத்தின் மனைவி வளர்மதி அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை கொண்டு, ஹிட்டாச்சி வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் போலீசார்.
Next Story




