தண்ணீர் பந்தல்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு.
தண்ணீர் பந்தல்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு. கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் கிடப்பதாக மண்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத உடல் இருப்பதை உறுதி செய்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத மூதாட்டி உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, இறந்த மூதாட்டியின் பெயர்,விலாசம், அவரது உறவினர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story





