ஊத்தங்கரை:தொழிலாளியை தாக்கியவர் கைது.

ஊத்தங்கரை:தொழிலாளியை தாக்கியவர் கைது.
X
ஊத்தங்கரை:தொழிலாளியை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (38). மொபைல் போன் கடை வைத்து உள்ளார். இவருடைய கடையில் கடந்த ஒருவருத்திற்கு முன்பு குன்னத்தூரை சேர்ந்ததொழி லாளி சுப்பிரமணி (37) என்பவர் செல்போன் வாங்கினார். அதற்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் மீத பணத்தை அவர் தரவில்லை இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மொபைல் வாங்கியதற்கான பணத்தை கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பணத்தை அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், சுப்பிரமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
Next Story