மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கம்
X
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் உத்திரவின் பேரில், மாநில துணை தலைவர் தங்கவேல் வழிகாட்டுதலில், பூத் கமிட்டி அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. 2,16,17,18,19,20,22,23,24,30 ஆகிய வார்டுகளில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நகர அமைப்பாளர் உஷா ஆகியோர் தலைமையில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பூத்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Next Story