சங்கரன்கோவிலில் தூய்மை படுத்தும் பணி நடைபெறவுள்ளது என ஆட்சியர் தகவல்

சங்கரன்கோவிலில் தூய்மை படுத்தும் பணி நடைபெறவுள்ளது என ஆட்சியர் தகவல்
X
தூய்மை படுத்தும் பணி நடைபெறவுள்ளது என ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு நான்காவது சனிக்கிழமை அன்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நெகிழி பொருட்களை சேகரித்து அகற்றுதல், நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு முகாம் நடத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் நகராட்சியில் (26.04.2025) அன்று காலை 7 மணி அளவில் 15 ஆவது வார்டு மற்றும் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் தூய்மை படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணிகள் சங்கரன்கோவில் நகராட்சி 23-ஆவது வார்டு அருள்மிகு சங்கரநாராயணர் கோவில் வாசலில் நடைபெற உள்ளது. மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 2.ஆவது வார்டு சங்கர் நகரிலும், 04.ஆவது வார்டு கோமதி நகரிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 23 ஆவது வார்டு BSNL அலுவலகத்திலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நெகிழி சேகரிப்பு நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் அனைவரும் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிபொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story