விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த வேளாண் துறை

மதுரை கொட்டாம்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை வேளாண் துறையினர் நடத்தினார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி வட்டாரம் வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி சொட்டுநீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து மனப்பச்சேரி புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நேற்று ( ஏப்.23) பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுபா சாந்தி, வேளாண்மை அலுவலர் ரகுராமன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன் சத்திய கீர்த்தனா, இ பி சி அலுவலர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு செய்து அதனை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மின்னல் கலைக்குழு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Next Story