பாதம்பட்டியில் கணவன் மனைவி வேகமாக சென்ற டூ வீலர் கீழே விழுந்து விபத்து.
பாதம்பட்டியில் கணவன் மனைவி வேகமாக சென்ற டூ வீலர் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், மூக்கனாங்குறிச்சி, தம்மநாயக்கன்பட்டி அருகே கோட்டையப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 47.இவரது மனைவி ஜெயந்தி வயது 40. இவர்கள் இருவரும் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 11:50 மணியளவில், கோடங்கிபட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் பாதம்பட்டி அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல் துறையினர்.
Next Story




