சங்கரன்கோவில் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது விவசாயிகள் மகிழ்ச்சி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பகுதிகளில் ஒரு வாரமாக வெப்பநிலை படிப்படியாக தற்போது உயர்ந்து உச்சபட்ச நிலையே தொடர்ந்து எட்டியது. இதனால் இன்று அனல் காற்று வீச தொடங்கியது இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினார் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டுமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. வெப்பம் அதிகரித்ததால் வீடுகளில் பொதுமக்கள் தஞ்சம் புக ஆரம்பித்தனர்.இந்த நிலையில் இன்று மதியம் வெயில் அதிகரித்ததால் திடீரென மேகமூட்டம் பலத்த காற்று வீச ஆரம்பித்தது இது அடுத்த திடீரென்று சங்கரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெல்லும் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

