குழந்தைக்கு பாலியல் தொல்லை - தந்தை கைது

X
காரைக்குடி பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், தனது 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அக்குழந்தையின் தாயார், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098-ல் புகார் செய்தார். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜாய்சரல் விசாரணை செய்தார். பின்னர் அவரது புகாரின்பேரில், சாக்கோட்டை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை கைது செய்தனர்.
Next Story

