சிவகங்கையில் உலக புத்தக தினவிழா கொண்டாட்டம்

சிவகங்கையில் உலக புத்தக தினவிழா கொண்டாட்டம்
X
சிவகங்கையில் உலக புத்தக தினவிழா கொண்டாடப்பட்டது
உலக புத்தக தினத்தை முன்னிட்டு காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட மைய நூலகம், நூலக நண்பர்கள் திட்டத்தின் சார்பாக உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுத் தலைவர் , முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா மற்றும் செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நூலக நண்பர்கள் திட்டத்தின் சார்பாக மாவட்ட மைய நூலகத்தின் உறுப்பினர் அடையாள அட்டையையும், புத்தகங்களையும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய நீதிபதிகள் பள்ளி மாணவர்கள், மாணவிகளுடையே வாசிப்பின் அவசியம் குறித்து பேசினர்.
Next Story