சிவகங்கையில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் இணைவு பெற்ற தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பதற்காக ஏற்கெனவே இருந்த 40% முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் எடைத் தராசும், அந்த அலுவலக கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பிறகே நியாயவிலைக் கடை எடைத் தராசை விற்பனை முனையத்துடன் இணைக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதியக் குழு அமைத்து 9 -ஆவது மாநில ஊதிய மாற்றக் குழுவுடன் சேர்க்க வேண்டும். ஏற்கெனவே நிலுவையிலுள்ள 30 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற முன்வரவே வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

