ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதா கண்டா அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

