திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பகுதிக்கு தேவையான வேளாண்மை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தனர். அதேபோல திருவாரூரின் பிரதான ஆறாக உள்ள ஓடம்போக்கி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
Next Story

