மனநலம் பாதித்த பெண்ணிடம் முறைகேடு ஒரத்தநாடு அருகே இரு வாலிபர்கள் கைது

மனநலம் பாதித்த பெண்ணிடம் முறைகேடு ஒரத்தநாடு அருகே இரு வாலிபர்கள் கைது
X
கிரைம்
ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த (20) வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்த செல்லதுரை (27). இவரது உறவுக்காரரான விக்னேஷ் (26), அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த (20) வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டஇளம் பெண்ணை வாயில் துணியை வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வாட்டாத்தி கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல் லத்துரை, விக்னேஷ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story