தஞ்சாவூரில், முன்னாள் படைவீரர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

தஞ்சாவூரில், முன்னாள் படைவீரர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்
X
மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வியாழக்கிழமை  நடைபெற்றது. இம்முகாமில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இசிஜி, இரத்தக் கொழுப்பு, சிறுநீரக செயல்பாடுகள் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு மருத்துவர்களால், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், 85 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.                    அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் 02 முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களுக்கு, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 2 சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.                 இக்கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர்.சொ.சரவணன் (ஓய்வு), மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.அருள்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story