விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊரகவளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊரகவளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
X
உடன் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோர் இருந்தனர்
விக்கிரவாண்டி வந்த சென்னை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் குமார், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட உள்ள இடம், வி.சாலையில் ஏரி துார்வார உள்ள இடம், முண்டியம்பாக்கத்தில் கலைஞர் கனவு இல்ல வீடுகள், அய்யூர் அகரம்-செங்கமேடு சாலையில் பழுதாகியுள்ள சிறு பாலத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் பத்மஜா, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியார் பிரசாத், உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், சுரேஷ்குமார், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், ஒன்றிய பொறியாளர்கள் குமரன், முருகன், செந்தில்வடிவு, பணி மேற்பார்வையாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story