ஊதியூர் வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

X
ஊதியூர் மலை சுமார் 960 எக்டர் நிலப்பரப்பை கொண்டது. இந்த மலையில் குரங்குகள், மான்கள், முள்ளம்பன்றிகள், முயல், கீரி, மயில்கள், காட்டுப்பன்றிகள் முள்எலிகள், உடும்பு, காட்டுப்பூனை, மரநாய்கள் என ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. இவை மழை பெய்யும் கால கட்டங்களில் மலையில் கிடைக்கும் தண்ணீர், காய், கனிகளை உண்டு வாழ்கின்றன. ஆனால் கோடை காலம் தொடங்கும் காலகட்டத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி இடம் பெயருகின்றன. இதனால் மலைப்பகுதியில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்கள் மற்றும் நகரங் களுக்கு வழித்தவறி வந்து விடுகின்றனர். சாலையை கடக் கும் சில மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் உண்டு. மேலும் பசுமை நிறைந்த காடுகள் கோடை காலத்தில் காய்ந்து வறட்சியாகும் போது வன உயிரினங்களை காப்பாற்ற கடந்த சில நாட்களாக வனத்துறை கட்டுபாட்டில் உள்ள காப்பு காடுகளில் காங்கேயம் வனத் துறை அலுவலர்கள் மலையை சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

