மருத்துவமனைக்கு சென்ற தாய் மகன் மாயம்

மருத்துவமனைக்கு சென்ற   தாய் மகன் மாயம்
X
நாகர்கோவில்
நாகர்கோவில் கோட்டார் வாகையடி குலாலர் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (47) ஆட்டோ டிரைவர். இவரது தாய் விஜயகுமாரி (69) இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயகுமாரியை, வசந்தகுமார் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற இருவரும் வெகு நேரமாகி வீடு திரும்பவில்லை. அவர்களை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து வசந்தகுமாரின் மகன் ஸ்ரீதர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் மாயமான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story