உதகையில் பா.ஜ.க. சார்பில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான சுற்றுலா பயணிகளுக்கு மலர் அஞ்சலி...

X
உதகையில் பா.ஜ.க. சார்பில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான சுற்றுலா பயணிகளுக்கு மலர் அஞ்சலி... காஷ்மீர் மாநிலம் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்து சுற்றுலா பயணிகளை மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 25 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பாஜகவினர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உதகையில் உள்ள காபி சதுக்கத்தில் உதகை நகர பாஜக சார்பில் இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மலர் அஞ்சலியில் பாஜக நகர கழக தலைவர் ரித்து கார்த்திக், மாவட்டத் துணை பொதுச்செயலாளர் பரமேஸ், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் மற்றும் அருண்குமார், கூற்று மாநில கூட்டுறவு செயலாளர் சென்ன கேசவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

