போச்சம்பள்ளி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சி- தோட்டத்திலேயே விட்ட விவசாயிகள்.

போச்சம்பள்ளி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சி- தோட்டத்திலேயே விட்ட விவசாயிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திருவயலூர், மேட்டுப்புலியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது மண்டிகள், சந்தைகளில் தக்காளி வாரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ. 3 முதல் 5 ரூபாய் வரை கொள்முதல் செய்ய படுவதால் விவசாயிகள் தக்காளியை தோட்டத்திலேயே விட்டுவிட்டனர். இதனால் கவலை அடைந்துள்ளனர்.
Next Story