கோவை: எரிசாராயம் பதுக்கிய கேரள நபர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை: எரிசாராயம் பதுக்கிய கேரள நபர் குண்டர் சட்டத்தில் கைது
X
கேரள கள்ளு கடைகளில் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக சுமார் 5,145 லிட்டர் எரிசாராயத்தை ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த கேரள வாலிபர் கைது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கேரள கள்ளு கடைகளில் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக சுமார் 5,145 லிட்டர் எரிசாராயத்தை ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜுகுமார் @ பிஜு (48) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள், பிஜுகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று பிஜுகுமார் @ பிஜு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, எரிசாராயம் பதுக்கிய வழக்கில் கைதான குற்றவாளி பிஜுகுமார் @ பிஜுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நேற்று சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story